சனி, ஜூலை 30, 2011

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


எனது நண்பர் பிரபாத் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் என் கமெண்ட்ஸ் களுடன் உங்கள் பார்வைக்கு




வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமானது தான்
இருந்தும் வாழ பழகி விட்டால்
இது கூட இங்கே இஷ்டமானது தான்



ஒரு உள்ளம்
உதவி நாடாமல்
இங்கே
உதவும் உள்ளமாய்



வண்டி இழுப்பவரின் மன வலு முன்னே
இந்த பளு எம்மாத்திரம்


இது ராஜ பாட்டை அல்ல
அதற்காக கலங்குபவரும் அல்ல



உழைப்புக்கு வயதேது சொல்லாமல் சொல்கிறது
ஓய்வறியா உள்ளம்

ஆர்.வி.சரவணன்

புதன், ஜூலை 27, 2011

அவன் வீட்டிலே விஷேசங்க


அவன் வீட்டிலே விஷேசங்க


பாக்யராஜ் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதைக்கு முயற்சித்திருக்கிறேன்

படித்து பாருங்கள்


ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்

தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்

எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்

இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்

டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல

அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே

இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு

முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல

அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி

திருமணத்திற்கு தயாரானான்

அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட

ஆம்

இப்ப அவன் வீட்டிலே விஷேசங்க

இந்த பதிவும் நான் நான் தளம் ஆரம்பித்த போது எழுதியது தான்

ஆர்.வி. சரவணன்


ஒரு நிமிஷம்

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை ச‌க‌வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் வெளியிட்டு பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்

நண்பர் அஹமது இர்ஷாத் தனது அலைவரிசை தளத்தில் உதவி செய்யலாமே என்ற தலைப்பில் இதை பற்றி எழுதியிருந்தார் அவரவர் தளங்களில் வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார் இதோ நானும்

http://bluehillstree.blogspot.com/2011/07/blog-post_25.html

வெள்ளி, ஜூலை 22, 2011

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....




ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....



எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ரிங் டோன் அது தான் ) நான் கையில் எடுத்து நம்பர் பார்க்கிறேன்

ஏதோ புது நம்பர், யாராயிருக்கும் என்ற யோசனையில் ஆன் செய்து

ஹலோ என்கிறேன்

ஆர்.வி.சரவணன் தானே பேசறது

என்று ஒரு வசீகர குரல் கேட்கிறது

நான் தயக்கமாய்
ஆமாம் நீங்க என்கிறேன்

நான் ரஜினிகாந்த் பேசறேன்

என்ற குரலை கேட்டு ஒரு விநாடி சிலையாகிறேன் உடனே சுறுசுறுப்பாகி யாராவது என்னை கிண்டல் பண்றதுக்காக பேசறாங்களோ
என்று மனம் தயக்கமடைகிறது அடுத்து என்ன பேசுவது என்று நான் தடுமாறுகிறேன்

என்னப்பா நம்பலையா நீ நிஜமா நான் தான் பேசறேன்

என்று கூறி அவருக்கே உரிய அந்த சிரிப்பொன்றை உதிர்க்கவும் நிஜம் தான் என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது
நான் சந்தோசத்தின் உச்சிக்கு செல்கிறேன் எனக்கு திடீரென்று சிறகுகள்
முளைத்தது போல் தோன்றுகிறது

மீண்டும் அவர் என்னப்பா ஒன்னும் பேச மாட்டேங்குறே என்கிறார்

சந்தோசத்தில் பேச வாய் வரவில்லை
தலைவா

என்கிறேன்

நான் போனில் பேச வந்ததும் உனக்கு வாய் பேச வரவில்லையோ

ஆம் தலைவா சாதாரண மனிதன் நான் இந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைச்சிருக்கே அதான்

நீயே ஏன் உன்னை தாழ்த்திக்கிரே

உண்மை அது தானே
தலைவா

தன்னடக்கமா தான் பேசறே

உங்க கிட்டே கத்துகிட்டது தான் தலைவா

ஹா ஹா

என்று சிரிக்கும் அவர்

தலைவான்னு சொல்லாதே
அது என்னை உங்களிடமிருந்து அந்நியப்படுத்துவது போல் இருக்கு அதனாலே அண்ணா னே சொல்லு

சரி தலைவா ச்சீ அண்ணா

அப்புறம் எப்படி இருக்கே வீட்டில் எல்லோரும் சவுக்கியமா

நாங்க நல்லா இருக்கோம்
என்னை விடுங்க அண்ணே நான் தான் உங்க கிட்டே கேட்கணும் நீங்க எப்படி இருக்கீங்க உங்கள் உடல் நலம் எப்படியிருக்கு

இப்ப நான் உன் கிட்டே பேசறேனே எப்படி தெரியுது

எப்போதும் போல் நல்லா தான் பேசறீங்க அண்ணே, உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நண்பர்கள் நாங்க எல்லோரும் உங்களை பார்க்க ஏர்போர்ட் வந்திருந்தோம்

அப்படியா என்னை பார்த்தீங்களா ஆச்சரியமாய் கேட்கிறார்

நான் மட்டும் பார்க்க முடியலை

ஏன்

ரசிகர் வெள்ளத்தில் உங்கள் கார் சூழ்ந்ததில் நான் பின்னுக்கு தள்ளப்பட்டேன் நான் நெருங்கி முன்னேறி வர முடியலை உங்களை பார்க்க முடியாம மனசு கஷ்டமாகி ஒரு நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் மூட் அவுட் லே இருந்தேன்

டோன்ட் வொர்ரி அதான் இப்ப போன்லே பேசறேனே

சொல்ல போனா நான் உங்க ரசிகன் தான் ஆனா என்னை விட எத்தனையோ கோடிகணக்கான ரசிகர்கள் உங்க மேல உயிரா இருக்காங்க இருந்தும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குதே ரொம்ப சந்தோசமாவும் இருக்கு அதே நேரத்திலே நீங்க என்கிட்டே பேசினதை சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கலே னு தவிப்பாவும் இருக்கு

கண்ணா , ஒரு தாய் தன் பிள்ளைகளை ஒண்ணா தான் நினைப்பாள் நானும் அப்படி தான் என்னோட ரசிகர்கள் அத்தனை போரையும் ஒண்ணா தான் நினைக்கிறேன் என்னோட ரசிகர்கள் சாம்ராஜ்யத்தில் பணக்காரன் ஏழை என்ற எந்த பேதமும் கிடையாது எல்லோரும் ஒண்ணு தான்

சரி அண்ணே என்னை எப்படி தெரிஞ்சுது உங்களுக்கு

அதுவா ரசிகர்கள் நிறைய பேர் இணைய தளத்தில்
எழுதறதா சொன்னாங்க சரின்னு இணைய தளம் ஓபன் பண்ணி பார்த்துகிட்டிருந்தேன்
அதுலே உன் ப்ளாக் பார்த்தேன்
என்னை பற்றி நீ எழுதியுள்ள பதிவும் படிச்சேன்
உடனே பேசணும்னு தோணிச்சு போன் பண்ணிட்டேன்

god gift இது எனக்கு

என் கிட்டே ஏதாச்சும் கேட்கணும்னா கேள் சரவணா


உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க ரசிகர்களை சந்திக்கணும் அவங்க கூட பேசி மகிழணும் மகிழ வைக்கணும் அப்படி ஒரு ரசிகர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா என் முறை வர ஒரு வருஷம் ஆனாலும் சரி ரெண்டு வருஷம் ஆனாலும் சரி உங்களை சந்திக்க காத்துகிட்டிருப்பேன்

ஹேய் குட் யா ஏற்பாடு பண்ணலாம் வேற என்ன சொல்லு

அண்ணே எனக்கு அறிவுரை ஏதாச்சும் சொல்லுங்களேன்

நான் என்னப்பா சொல்றது உன் வாழ்க்கை உன் கையில் இருக்கு

அண்ணே எனக்காக ஒன்று ஸ்பெஷல் லா சொல்லுங்களேன்

அப்படியா

என்று ஒரு விநாடி யோசிப்பவர்

நீ சுவற்றில் விட்டெரியும் பந்து போன்றது தான் நீ செய்யும் நன்மையும் தீமையும் உன்னிடமே திரும்பி வரும் ஆகவே கவனமாய் இரு நன்மையை மட்டும் செய்
ஹவ் இஸ் இட்

சூப்பர்
ஓகே சரவணா உன் குடும்பம் தான் உனக்கு முக்கியம் முதல்லே அதை பார் அப்புறம் என்னை பார்க்கலாம் சரியா

என்ன அண்ணே இப்படி பிரிச்சு பேசறீங்க எங்க குடும்பத்திலே நீங்களும் ஒருத்தர் அதனாலே குடும்பத்தோடு சேர்த்து உங்களையும் நல்ல படியா பார்த்துக்குவோம்

என்று நான் சொன்னவுடன்

வெரி குட் ஐ லைக் இட் என்று சொல்லி

அவருக்கே உரித்தான அந்த சிரிப்பை
மீண்டும் உதிர்த்து

வாழ்த்துக்கள் ஆர்.வி. சரவணன்
அப்புறம் பார்க்கலாம் வச்சிரட்டா


என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்

நான் போனை கீழே வைக்க கூட மனமில்லாமல் கையிலேயே வைத்து கொண்டிருக்கிறேன்

திடீரென்று விழிப்பு வருகிறது எனக்கு

தூக்கத்தில் கனவு கண்டிருக்கிறேன் என்பது புரிகிறது

அட இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா

ஏமாற்றத்தில் என் மனம் சோர்வடைகிறது

கனவு தான் இது என்றாலும்
என் வாழ் நாளின்

இனிமையான

சுகமான

முக்கியமான

கனவுகளில்ஒன்றாய் இது இருந்து விடட்டும்

ஆர்.வி.சரவணன்

*****
நமது நண்பர் ஜீவதர்ஷன் எழுதிய ரஜினி, ரசிகர்கள் கற்பனை சந்திப்பு பதிவு தான் இந்த பதிவிற்கான inspiration

நன்றி
ஜீவதர்ஷன்

*****