சனி, ஜனவரி 12, 2013

இளமை எழுதும் கவிதை நீ -18


இளமை எழுதும் கவிதை நீ -18






விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்  பட்டியலில் எனக்காக 
நீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன் 

சிவாவின் நடவடிக்கை அடுத்து என்னவாக இருக்கும் என்பதே அங்கிருந்த அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.மரங்கள் கூட நிசப்தமாய் இருப்பதை போல் ஒரு பிரமை. சுரேசுடன்  இருந்தவர்கள் பயத்துடன் நழுவ தயார் நிலையிலும், மாணவ மாணவிகள் சிவா எந்த நேரம் சிலிர்த்து எழ போகிறான் என்று பார்த்து கொண்டும், இருக்க பாலு சிவாவின் அருகே மெல்ல வந்தான் உமா கோபமாய்  திரும்பி சுரேஷை முறைத்தாள்.

சிவா தான்  வைத்திருந்த தட்டை கீழே வைத்து விட்டு வேகமாக எழுந்தான்.சுரேஷை முறைத்து பார்த்த படியே பின்னோக்கி நகர்ந்தான். மிக வேகமாய் சென்றவன்  அடிக்க தோதாக என்ன பொருள் கிடைக்கும் என்பது போல்  சுற்று முற்றும் பார்த்தான்.ஒன்றும் கிட்டாமல் போகவே அப்படியே வராண்டாவில் ஜம்ப் செய்து  ஏறி தன் கிளாஸ் ரூமுக்கு ஓடினான். கூடவே பாலு வும் ஓடினான் 

இதை பார்த்து வேகமாய் எழுந்த உமா சுரேஷை பார்த்து 

"ஸ்டுடென்ட் ஸ் கூட சேர்ந்து சாப்பிடறது உனக்கு பிச்சை எடுத்து சாப்பிடற மாதிரி தோணுதா"  என்று கோபமாய் எகிறினாள் 

"உமா அவன் கூட பழகாதே அவன் பசு தோல் போர்த்திய புலி "

"உன்னுடைய கரிசனத்திற்கு நன்றி முதல்ல  இங்கிருந்து கிளம்பு  சிவா கிட்டே மாட்டிட போறே "என்று சொல்லி விட்டு நேராக கிளாஸ் ரூம் பக்கம் வேகமாய் செல்ல கூடவே தொடர்ந்தனர் அவளது தோழிகள்.


தொடரும்

ஆர்.வி.சரவணன்




The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஓவியம் நன்றி இளையராஜா 

17 கருத்துகள்:

  1. அருமையான கதை ..பாராட்டுக்கள்..

    இதயம் நிறைந்த
    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. ஆரம்பத்தில் இருந்த டெம்போ இன்னும் குறையாமல் செல்வதுதான் இதோட சிறப்பு சார் ././.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில் இருந்தே கதையுடன் ஆர்வமாய் பயணிக்கும் தங்களை போன்ற நண்பர்களின் ஊக்கம் தான் அரசன் நன்றி

      நீக்கு
  3. சம்பவங்கள் அடுத்தடுத்து...
    கோர்வையாகச் செல்கிறது.

    அடுத்த கட்டம் என்னவென்று
    ஆர்வம் மேலிடுகிறது.

    கதையின் அடுத்த பகுதியை (மட்டும்)
    இ-மெயிலில் அனுப்பி வையுங்கள்,
    எனக்கு (மட்டும்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில் இருந்தே கதையுடன் ஆர்வமாய் பயணிக்கும் தங்களை போன்ற நண்பர்களின் ஊக்கம் தான் nizhamudheen sir thanks

      நீக்கு
  4. இந்த வார அத்தியாயத்தில் எழுத்துப் பிழைகள் சற்றே அதிகம்.
    தயவு செய்து கவனிக்கவும்.... 2

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் இல்லத்தில் அனைவருக்கும் இனிய
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்....3

    பதிலளிநீக்கு
  6. சரவணன் சார்... எல்லா அத்தியாயங்களையும் முழுமையாகப் படித்து விட்டேன். அருமையான கதைகளம், அருமையான காட்சி நகர்வுகள், பின்வரும் பாகங்களுக்காக காத்திருக்கிறேன். மேற்கொண்டு மற்றவற்றை தொலைதொடர்பு கொள்வோம்....

    பதிலளிநீக்கு
  7. ஒரு தொடர்கதைக்கு, ஓவியங்கள் வரைவது பல ஓவியர்களா? புதுமையாயிருக்கே!

    பதிலளிநீக்கு
  8. Money கொடுத்துதவுவதால், நண்பன் பெயர் 'மணி' என்று வைத்தீர்களோ? பொருத்தம்தான் ... 5

    பதிலளிநீக்கு
  9. மணி போன்ற நட்பு கிடைப்பதும் அறிது. அதனை தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் சிவாவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை சிறப்பு தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்